ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 362,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 16,697 […]
