அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகன் ஹரிஷ் பாபு. இவர் அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவெளியில் விடுதிக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வகுப்பிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]
