கட்டிட தொழிலாளியை வேன் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புது வாணியர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு தனது சுய வேலை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து மணிவண்ணன் தனது உறவினரான பார்த்திபன் என்பவருடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் வேன் டிரைவரான ஸ்ரீகாந்த் என்பவர் அங்கு சென்றுள்ளார். […]
