Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து மணிகண்டன்- சோபியா ஜோடி விளக்கமளித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் வினோத், திவாகர், மணிகண்டன், சரத், மைனா நந்தினி, தீபா, காயத்ரி உள்ளிட்ட பலர் […]
