சென்னை லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் […]
