பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்நிலையில் பேருந்து நிலையத்தை சுற்றி இருக்கும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று குளச்சல் போக்குவரத்து போலீசார் பேருந்து […]
