தேனிலவுக்காக வந்த புதுமண தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேலுச்சாமி நகரில் விக்னேஷ்-கிருத்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் தேனிலவுக்காக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பின் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் தம்பதியினர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை கணவன் மனைவி இருவரும் […]
