செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் கடற்கரையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களின் மகள் மதுமிதா பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனை எடுத்து மதுமிதா கேம் விளையாடுவதால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். […]
