மகனை காப்பாற்ற சென்ற தாயும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னமாலம் கிராமத்தில் மாதேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாதேஷ் என்ற மனநிலை பாதித்த மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகன் மாதேஷுடன் ரத்தினம் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த சமயம் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி மாதேஷ் அங்குள்ள தனியார் விவசாயத்துக்கு சென்று தண்ணீர் எடுத்துள்ளான். […]
