நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது, கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 1126 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 1112 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் […]
