பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்குக் காட்டினால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும். வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் […]
