சந்திரயன்-2 திட்டத்தில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. […]
