வீட்டின் மேற்கூரையை உடைத்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அரிய வகை குரங்கினமான சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று காலை ரொட்டிக்கடை பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கவால் குரங்குகள் நுழைந்தது. இந்த குரங்குகள் கட்டிட தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவரது வீட்டு மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் சமையலறையில் இருந்த உணவுப் பொருட்களை தின்று […]
