சென்னையில் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 67 வயதான மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் கடந்த 1-ம் தேதி கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் ஒரு போலீஸ் என குப்பானந்தனிடம் கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக […]
