ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 58, 500 ரூபாயை அதிகாரிகள் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணம் வழங்குவதை தடுப்பதற்காக பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும்படை அலுவலரும், தனி வட்டாட்சியருமான ராஜலட்சுமி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து குளத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் […]
