விடுதியில் தங்கியிருந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் 12 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பறக்கும் படை குழுக்கள் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் […]
