மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் தாக்கப்பட்ட முகமது பைசான் சிகிச்சைக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். கடந்த 11-ம் தேதி இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு, அதனை புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பைசான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக தினேஷ்குமார், கணேஷ் […]
