தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நினைவு சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதமடைந்துள்ளது. ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது குலி குதுப் ஷாவால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1591_ம் ஆண்டு கட்டப்பட்டு 428 வயதான இந்த கோபுரம் 160 உயரமுள்ளது. சமீபத்தில் இந்த கோபுரத்தை இந்தியாவிலுள்ள தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒன்றால் புதுப்பிக்கப்பட்டது. நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்ட இந்த கோபுரத்தின் தூண் ஒன்று நேற்று இரவு சேதமடைந்து கீழே விழுந்தது. […]
