நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் […]
