பாழடைந்து கிடக்கும் பழைய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் இயங்கி வந்த பழைய அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தற்போது ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பழைய அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் பாழடைந்து புதர்மண்டி பூட்டியே கிடக்கிறது. மேலும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டும் இடிந்த நிலையிலும் காணப்படுகிறது. இது எந்த நேரத்திலும் சாலையில் செல்பவர்கள் மீது விழ […]
