உச்சநீதிமன்ற அனுமதியையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]
