முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]
