கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ இளம்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ததாக பரவிய செய்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்எல்ஏ-வான பிரபு இன்று அதிகாலை தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண்ணின் தந்தையான சுவாமிநாதன் தனது மகள் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ பிரபு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுவாமிநாதன் வெளியிட்டார். அதில் பிரபு தனது வீட்டிற்கு அடிக்கடி வந்ததாகவும் தன்னுடன் நட்புடன் பழகி வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி […]
