மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடியது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது குழந்தையுடன் சரோஜ் பாபுலால் குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பேரவை வளாகத்தில் பச்சிளம் குழந்தையுடன் சரோஜ் பாபுலாலை கண்ட பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களின் […]
