போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இருக்கின்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். […]
