2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து தமிழ்நாட்டில் அனைத்தும் மாறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிலை அமைப்பது கருணாநிதிக்குப் பெருமைத் தேடிதருவதற்கு அல்ல; அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எனக் கூறினார். இரண்டு நாள்களாக உள்ளாட்சித் தேர்தல் […]
