மு.க. ஸ்டாலின் – கே.எஸ். அழகிரி சந்திப்பு கூட்டணி தொடர்பாக நீண்ட நாள்களாக இருந்து வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். திமுக அரசியல் […]
