செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு முதலமைச்சர் தொகுதியாக இருக்கின்ற கொளத்தூர் தொகுதியில் கூட சாக்கடை நீர், கழிவு நீர் எல்லாம் கலந்து குடிநீர் குடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறதெல்லாம் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல…. எல்லா தொகுதிகளும் இன்றைக்கு இருக்கும் நிலை… புழல் ஏரி திறக்கப்படும் போது சரி ஒரு அறிவிப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான முன்னேற்பாடுகள் செய்வார்கள். என்னவென்றால் தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்கள் எல்லாம் என்ன பண்ணுவார்கள் என்றால் […]
