லசித் மலிங்கா 12 மணி நேரத்தில் 2 நாடுகளில் விளையாடி10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்ற லசித் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். மும்பை அணிக்காக அன்று இரவு வரை பங்கேற்ற லசித் மலிங்கா, பின்னர், உடனே அங்கிருந்து புறப்பட்டு தனது தாயகமான இலங்கைக்கு சென்றார். இலங்கையில் நேற்று காலையில் பல்லகெலேவில் […]
