சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று தயவுசெய்து எவரிடமும் உதவி கேட்க வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். அளவான முதலீடு போதுமானது. பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவேண்டும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்களுடைய சொல்படி கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வழக்குகளை திறமையாக சமாளிப்பீர்கள். சில விஷயங்களை மட்டும் தள்ளிப் போடுங்கள். அதாவது இழுபறியாக இருக்கக் கூடிய விஷயங்களை தயவுசெய்து இப்போதைக்கு வேண்டாம். […]