நாளைய பஞ்சாங்கம் 18-03-2021, பங்குனி 05, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 02.10 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பரணி நட்சத்திரம் பகல் 10.34 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 10.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 18.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும். ரிஷபம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். […]