அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் என்ன எல்லோருக்கும் சேர்த்து தான் பிரச்சாரம் செய்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது. போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. மேலும் இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி […]
