அதிகாரிகள் மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரசனூர் பகுதியில் நாராயணசாமி என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மைனர் பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்த போது, மைனர் பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக விழுப்புரம் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் அளிக்கப்பட்டது. […]
