அண்டை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை திருத்த சட்டம் 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது […]
