சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாநகராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை இலஞ்ச ஊழல் தடுப்புத் துறை […]
