இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோமாக என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பருவமழை பொய்த்ததால் சமீபத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் மக்கள் தெருத்தெருவாக காலிகுடங்களுடன் அலைந்தனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டும் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
