பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கேட்கலாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12-ஆம் […]
