தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலை உயர்வு தொடர்பாக அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். ’வெங்காயம்’ மக்கள் அதிக அளவில் தங்கள் உணவில் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும். அடிக்கடி விலை ஏற்ற இறக்கத்தை சந்திப்பதால் வெங்காயத்தை சாதாரண மக்கள் அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.தலைநகர் சென்னையைப் பொருத்தவரையில், வெங்காயம் 30 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் பெரிய வெங்காயம், கிலோ ஒன்று […]
