குத்துச்சண்டை போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாக்சிங் செய்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச்சண்டை வீரருடன் பாக்சிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். பாக்ஸர் கோச்சுடன் சிறிது நேரம் சண்டையிட்டு அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தார். மேலும் ‘கையை அப்டி வெக்கக் […]
