Categories
அரசியல் மாநில செய்திகள்

“மு.க ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” கிண்டல் செய்த ஓ.எஸ் மணியன்..!!

“மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்  சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்க்காக என்று திமுக சார்பில் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்ட பேரவை  ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையின் பாரம்பரியத்தை காப்போம்” பின்வாங்கியது கேரள அரசு …!!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இந்து அமைப்புகள் , பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாலின […]

Categories
மாநில செய்திகள்

“பா.ரஞ்சித் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் “அமைச்சர் கருத்து..!!

ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் அவர்கள் பேசியது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பா ரஞ்சித் அவர்கள் பேசினார். அதில் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று அவர் பேசி இருந்தார். இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும், ராஜராஜ சோழனின் ஆதரவாளர்களும் பா.ரஞ்சித்தின்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவந்தனர். இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் “அமைச்சர் கருப்பண்ணன் பேட்டி ..!!

மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]

Categories
அரசியல்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களை சந்திக்க தடை..!!

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும்  ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது    அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி, உட் கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் […]

Categories
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்  5 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த  இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றரை மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“செல்போனுக்கு அனுமதியில்லை” கட்டுப்பாடுடன் முடிந்தது அதிமுக ஆலோசனை கூட்டம்..!!

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிமுகவினருக்கு  செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தோல்வியுற்ற அதிமுக அதிஷ்டவசமாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அதிமுகவில் தலைமை குறித்து பல்வேறு நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள். அதிமுகவிற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக MLA தொலைக்காட்சியில் பேட்டி முதற்கொண்டு அளிக்க தொடங்கினார்கள்.   இதனால் அதிமுகவில் சலசலப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக ஆலோசனை கூட்டம்” அமைச்சர் , MLA என 6 பேர் பங்கேற்கவில்லை…!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில்  அமைச்சர் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியினரின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விகள் குறித்தும் ,   கட்சியின் தலைமை விவகாரம் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றிய பல்வேறு முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த கூட்டத்தில் அதிமுக_வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என மொத்தம் 6 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 இடம்” அமைச்சர் பேட்டி ..!!

மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுக” உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்… பாஜக இல.கணேசன் கருத்து…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது  நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்று   பாஜக_வின் இல.கணேசன்  தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரவையில் இடமில்லை “சென்னைக்கு திரும்பாத OPS” டெல்லியில் இருக்கிறார்…!! 

தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் டெல்லியில் இருந்து OPS மற்றும் அவரது மகன் சென்னை கிளம்பாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மோடியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி தான் முடிவு செய்வார் “மத்திய அமைச்சரவையில் அதிமுக” குறித்து தமிழிசை பதில்…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இனிமேல் நான் அமைச்சர் இல்ல தலைவர்” பாஜகவின் தலைவராக ஜெயப் பிரகாஷ் நட்டா…!!

பாஜகவின் அடுத்த தலைவராக அமைச்சரவையில் இடம் கிடைக்காத  ஜெயப் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யபட இருப்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி பிடித்தது . நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கடந்த முறை பதவி “இந்த முறை அம்போ” பாஜகவின் முக்கிய தலைகள்…!!

நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அவருடன் சேர்த்து பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களுடன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வும் பதவி ஏற்றார். […]

Categories
அரசியல்

பிஜேபியை “பீப் ஜனதா பார்ட்டி” என்று மாற்றிய ஹேக்கர்கள்…..!!

மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற நிலையில் ஹேக்கர்கள் பாஜகவின் டெல்லி இணையத்தை ஹேக் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.இதற்கிடையே பாஜகவின்  டெல்லி இணையதளம் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் அந்த இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி ,  மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளின் புகைப்படம்  பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை ஹேக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “கைதட்டி மகிழ்ந்த மோடியின் தயார்” வைரலாகும் புகைப்படம்..!!

மோடியின் பதவி ஏற்பு விழாவை TV கண்டு மகிழ்ந்த அவரின் தயார் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவை தனது வீட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் தயார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2_ஆவது முறையாக மோடி” இந்தியா கண்ட 15 பிரதமர்கள் பட்டியல்…!!

இதுவரை இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் குறித்தும் அவரின் ஆண்டு குறித்தும் காண்போம்.  இந்திய நாட்டின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 23_ஆம் தேதி எண்ணப்படட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றி ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்றுள்ளது. பாஜகவின் 17-வது புதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய மத்திய அமைச்சரவை” 24 கேபினட் , 25 இணை அமைச்சர்கள் பட்டியல்…!!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அதே போல அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு 25 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 24  இணையமைச்சர்கள் பெறுப்பேற்றுக்கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் […]

Categories
அரசியல்

சற்றுமுன் :அமைச்சரவையில் அமித்ஷா..!!

அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பட்டிருப்பதாக குஜராத் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார் . பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை பதவி ஏற்க  இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையின் முகப்பு பகுதியில் இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.  அதற்க்கு முன்பாக பிரதமர்  மோடி தலைமையில் புதிய அமைச்சரவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “டெல்லியியை நோக்கி தலைவர்கள்” பலத்த பாதுகாப்பு…!!

மோடி பதவியேற்பையடுத்து தலைநகர் டெல்லியில் பல்வேறு தலைவர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை பதவி ஏற்க  இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையின் முகப்பு பகுதியில் இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் புதிய அமைச்சரவையில் 70 அமைச்சர்கள்…..!!

பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் 65 முதல் 70 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அதே போல பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமைச்சராகும் தமிழ்ப்பட நடிகை” தொடர்ந்து 2_ஆவது முறை வெற்றி….!!

பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]

Categories
அரசியல்

“அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் “அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…!!

நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் 2_ ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த 18 _ ஆம் தேதி நாடடைபெற்று முடிந்த நிலையில் அறிவிக்கப்படாத  4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக […]

Categories

Tech |