இந்தியாவிலே 30,000 பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9.19 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத வைரஸை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறோம். தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 87 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் விகிதம் 55% ஆக உள்ளது, கண்காணிப்பு நடவடிக்கைகள் […]
