மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக […]
