அன்று உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் தடுத்தார்கள், இன்று வாக்கு எண்ணிக்கையை தடுக்கிறார்கள் என திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்டமாக சிறப்பாக நடந்துவிட்டது. இரண்டாம்கட்ட தேர்தல் திங்கள்கிழமை (டிச30) நடக்கிறது. அந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கும் சுயேச்சைக்கும் வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தத் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி […]
