நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த 2 வயது குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண தொகையை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தில்லைநகர் விரிவாக்க பகுதியில் சபரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய அயனேஷ் என்ற மகன் இருக்கிறான். கடந்த மாதம் கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு தமிழரசி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு இருக்கும் பூங்காவிற்கு சபரிநாத் தனது […]
