மீன ராசி அன்பர்களே, இன்று போட்டி, பந்தயத்தில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். தொழிலில் உள்ள குளறுபடியை நீங்க சரி செய்வதால், ஓரளவுக்கு வளர்ச்சி கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள், மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும், பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது ரொம்ப நல்லது. […]
