அரியலூர் அருகே குக்கிராமம் ஒன்றிற்கு ரூபாய் 2இல் மினரல் வாட்டர் வழங்கி வரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே வசிக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால், அவர்கள் குடிப்பதற்கு பெருமளவு நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் சூழ்நிலை இருந்தது. நிலத்தடி குடிநீர் அத்தனை சுவையாக இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்கள் தேவைக்கு நீர் அருந்தினார்களே […]
