புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜெயபாலை கொலை செய்து கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். கோரிமேடு பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகேயுள்ள காலி இடத்தில், குப்பை அகற்றும் தொழிலாளி ஒருவர், இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவலளித்தார். உடனே அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் […]
