12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு […]
