தமிழகம் மற்றும்புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிழக்கே நிலவும் வள்ளிமண்டல மேல் சுழற்ச்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு […]
