சாலையோர கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே சாலையோர வியாபாரிகள் 40 ஆண்டுகளாக காய்கறி, பழம் மற்றும் காலணிகள் போன்ற 98 சிறு கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விம்கோ நகர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியிலுள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
